Tuesday 1 January 2013

பெண்கள் மீதான வன்கொடுமைகளிற்கு முதல் காரணம் பெண்கள்தானா?


டில்லி மாணவி ஓடும் பஸ்ஸில் வன்புணர்ச்சிக்கு ஆளானமை இந்தியாவையே நிலைகுலைய வைத்தது .அதுவும் அதியுச்ச பாதுகாப்புகள் நிறைந்த அரசியல் தலைநகரான டில்லியில் இவ்வாறான சம்பவம் நடந்தமை உண்மையிலேயே பெண்கள் மீதான பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது .இரவு பத்து மணியளவில் தன் கல்லூரி நண்பன் ஒருவனுடன் பஸ்ஸில் ஏறிய குறித்த பெண் ,பஸ் ஓட்டுனர் உட்பட அங்கேயிருந்த ஆறு நபர்களினால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் ,கடுமையான வன்தாக்குதலிற்கு உட்படுத்தபட்டும் உள்ளார் .பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார் .இதற்கிடையில் சாதாரண குடிமகன் தொடக்கம் பாராளுமன்ற அமைச்சர்கள் வரை தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டங்களையும் ,கண்டன போராட்டங்களையும் ஆரம்பித்திருந்தார்கள் .அமைச்சரவையில் டில்லி உட்பட ஏனைய பிற மாகாணங்கள் வரை பெண்கள்மீதான வன்முறைகளிற்கு எதிராக புதிது புதிதான  தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாளன .ஐ.நா செயலாளர் பான் கீ மூன்  இவ்வாறான சம்பவங்கள் உண்மையிலேயே பாரதூரமான ஒன்று எனவும் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்றும் அறிக்கை விட்டிருந்தார் .தவிர ஐரோப்பிய தொலைகாட்சிகள் கூட டில்லி சம்பவத்தினை பற்றி பக்கம் பக்கமாக அலசி செய்தி வெளியிட்டு இருந்தது .இது இப்படி இருக்க நடந்த சம்பவத்திற்கு யார் நிஜமான காரணம்?அவசர அவசரமாகவும் ,புதிது புதிதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றபடுவதால்  பெண்கள் மீதான இப்படியான பாலியல் அச்சுறுத்தல்கள் குறைந்துபோவதற்க்கான அல்லது முற்றாக ஒழிந்து போய்விடுவதற்கான சாத்தியப்பாடுகள் உண்டா ?பார்க்கலாம் .

- by thiruthiya